லக்னோ,

யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ அரசு, சமீபத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், விஐபிக்கள் உள்ள பகுதிகளில் செல்பி எடுக்க தடை விதிப்பதாக உத்தரவிட்டிருந்தது.

இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் உ.பி. மாநில அரசியல் கட்சியினரும் கடும் கடணடனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், செல்பி தடை உத்தரவு குறித்து, உ.பி. மாநில முன்னாள் முதல்வரான அகிலேஷ் யாதவ் தனது டுவிட்டர் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

அதில், இந்த தடை ஆதித்யநாத்தின், நியூ இயர் பரிசு என்று கூறியுள்ளார். மேலும் பகுஜன் சமாஜ் கட்சி உள்பட அரசியல் கட்சியினர் பாஜ அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உ.பி.மாநில அதிகாரி ஒருவர்,  முக்கிய பிரமுகர்கள் வரும்போது, பொதுமக்கள் செல்பி எடுத்து வருவதால், பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படுவதாகவும் கூறப்பட்டு வருகிறது. அதன் காரணமாகவே அரசு, விஐபி-க்கள் வசிக்கும் பகுதிகளில் செல்பி எடுக்க தடை விதித்துள்ளது என்று கூறினார்.

‘செல்பி’க்கு தடை: உ.பி. பாஜ அரசின் வினோத உத்தரவு