லக்னோ:
உ.பி. தேர்தலில் பாஜ ஆட்சி அமைந்து முதல்வராக யோகி ஆதித்யாநாத் பொறுப்பேற்றுள்ளார். அப்போது முதல் சட்டவிரோத மாட்டு இறைச்சி கூடங்களை மூடி வருகிறார். மேலும் இறைச்சி கூடங்களுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். தற்போது 17 விதிமுறைகள் அடங்கிய கட்டுப்பாடுகள் இறைச்சி கூடம், கடைகளுக்கு வகுக்கப்பட்டுள்ளது.

உ.பி. இறைச்சி வியாபாரிகள் பின்பற்ற வேண்டிய 17 விதிமுறைகள்…

# மத வழிபாட்டு தளங்களில் இருந்து 100 மீட்டர் தள்ளி இருக்க வேண்டும்.

# காய்கறி சந்தையில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

# உள்ளாட்சி அமைப்பு, உணவு மற்றும் பாதுகாப்பு ஆணைய தடையில்லா சான்று பெற வேண்டும்.

# கிராம பஞ்சாயத்து, கிராம உணவு மற்றும் பாதுகாப்பு ஆணைய தடையில்லா சான்று பெற வேண்டும்.

# உணவு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டால் உடனடியாக உரிமம் ரத்து செய்யப்படும்.

# இறைச்சி கடை பணியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவர்களிடம் உடல்நல சான்றிதழ் பெறவேண்டும்.

# கால்நடை மருத்துவரிடம் இறைச்சி சான்றிதழ் பெற வேண்டும்.

# கடைகளில் இறைச்சி வெளியில் தெரியாத அளவுக்கு மறைத்து வைத்திருக்க வேண்டும்.

# நோயுற்ற, கர்ப்பமாக உள்ள விலங்குகள் பலியிட கூடக் கூடாது.

# 6 மாதத்திற்கு ஒரு முறை கடைக்கு சுண்ணாம்பு அடிக்க வேண்டும்.

# ஸ்டீல் கத்தி மற்றும் பிளேடுகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

# குளிர்சாதன வசதிகொண்ட வாகனங்களில் மட்டுமே இறைச்சியை கொண்டு செல்ல வேண்டும்.

# இறைச்சி கூடங்கள் முழு கொள்முதல் விபரங்களை வைத்திருக்க வேண்டும்.

# கழிவுகள் முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும்.

# வெளிப்படை தன்மை கொண்ட குளிர்சாதனப் பெட்டி வைத்திருக்க வேண்டும்.

# வெண்ணீர் இயந்திரம் பொறுத்தியிருக்க வேண்டும்.

#. கடை உள்ளே பலியிடும் விலங்குகள் மற்றும் பண்ணைகள் இருக்க கூடாது.