லகாபாத்

த்தரப்பிரதேச அரசு தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிறப்பித்த 120 கைது உத்தரவுகளில் 94ஐ அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தேசியப் பாதுகாப்பு சட்டம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தவறாக பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.   எதிர்க்கட்சிகள் மற்றும் பத்திரிகைகள் எழுப்பிய இந்த குற்றச்சாட்டுக்குப் பல ஆர்வலர்களும் ஆதரவு அளித்துள்ளனர்.   இந்நிலையில் இது குறித்து செய்தி ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன

அதில், “கடந்த ஜனவரி 2018 மற்றும் டிசம்பர் 2020 க்கு இடையில், அலகாபாத் உயர்நீதிமன்றம்  120 ஆட்கொணர்வு மனுக்கள் மீது  தீர்ப்பளித்து உள்ளது. இந்த தீர்ப்பில்  32 மாவட்டங்களில் உள்ள நீதிபதி உத்தரவுகளை ரத்து செய்து 94 தடுப்புக்காவல்களில் இருந்த  கைதிகளை விடுவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள், இவர்கள் பசுக்கள் படுகொலை செய்யப்பட்டதாக்க கூறப்படும் வழக்கு  அடிப்படையில் மாவட்ட நீதிபதியால்  தடுப்பு காவலில்  வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்குகளில் 30 வழக்குகளில் – 70 சதவீதத்துக்கும் அதிகமான வழக்கில்  உயர்நீதிமன்றம் உத்தரப்பிரதேச அரசைக் கண்டித்து உள்ளது.   அத்துடன் அவர்கள் மீது போடப்பட்ட  தேசியப் பாதுகாப்பு சட்ட உத்தரவை ரத்து செய்து மனுதாரரை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

பாக்கி உள்ள 11 பசுமாடு படுகொலை வழக்குகளில் கூட, ஒன்றைத் தவிர, மற்றவற்றில் கீழ் நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கி அவர்களுக்கு நீதிமன்ற காவல் தேவையில்லை என்பதைத் தெளிவுபடுத்தி உள்ளது.

மாவட்ட நீதிபதிகளின் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான உத்தரவுகளை உன்னிப்பாக ஆராய்ந்தால், இந்த கடுமையான சட்டம் ஏன் உடனடியாக செயல்படுத்தப்படுகிறது என்பது தெரிய வருகிறது.  அதாவது. ஒரு நபரை முறையான குற்றச்சாட்டு இல்லாமல் மற்றும் விசாரணையின்றி தடுத்து வைக்கத் தேசியப் பாதுகாப்பு சட்டம் இந்த  அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது.

வழக்கு  ஆய்வுகளில் குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் பெற்றிருந்தாலும் கூட, அந்த நபர் நீதிமன்ற  காவலில் இருந்து விடுவிக்கப்படுவதைத் தடுக்க உத்தரப்பிரதேசத்தில்  இந்த கடுமையான சட்டம் பயன்படுத்தப்பட்டது என்பதும் தெளிவாகி உள்ளது.

கடந்த ஜனவரி 2018 முதல் 2020 டிசம்பர் வரை  தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 12 தடுப்புக்காவல்களில், குற்றவியல் நீதிமன்றம் ஏற்கனவே ஜாமீன் வழங்கிய நபர் 200 நாட்களுக்கு மேலாகச்  சிறையில் இருந்துள்ளார்.   தவிர மூன்று  நபர்கள் தடுப்புக்காவல்களில்,  300 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தனர் – அதாவது ஒரு வழக்கில், 325 நாட்கள், மற்றொரு வழக்கில், 308 நாட்கள் தடுப்பு காவலில் இருந்து உள்ளனர்.

வழக்கமாகக் குற்றம் சாட்டப்பட்டவர் காவல்துறை காவலில் இருக்கும்போது, 24 மணி நேரத்திற்குள் நீதிபதி முன் முன்னிறுத்தப்படுவதற்கான ஒரு நபரின் அரசியலமைப்பு உரிமையையும் இந்த  சட்டம் பறிக்கிறது.  இந்த சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டு உள்ள  நபருக்கு ஒரு குற்றவியல் நீதிமன்றத்தின் முன் ஜாமீன் மனுவை நகர்த்துவதற்கான உரிமையும் இல்லை.

இந்நிலையில் ஆட்கொணர்வு மனு ஒன்றே கைதானோருக்கு அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரே பாதுகாப்பாகும், இந்த ஒரு அம்சம் மட்டுமே தேசியப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மக்களைக் காவலில் எடுக்கும் தடையற்ற அரசு அதிகாரத்திற்கு எதிராக உள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.