1%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%be-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d
லக்னோ:
உ.பி.யில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் மாயாவதி ஆட்சியை பிடிப்பார் என்று கருத்து கணிப்பு தகவல் தெரிவித்துள்ளது.
 
அடுத்த ஆண்டு முதலில் நடைபெற இருக்கும் உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், இதனால் அங்கு தொங்கு சட்டசபை உருவாக வாய்ப்புள்ளதாகவும் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. ஆனால் மாயாவதி கட்சிதான் அதிக  இடங்களை கொண்ட கட்சியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் 2017ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலையொட்டி பாஜ, காங்கிரஸ், மாநில கட்சிகளான சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தேர்தல் வருவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பே அனைத்து கட்சிகளும் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். ராகுல்காந்தி ஏற்கனவே கிஷான் யாத்திரை என்ற பெயரில் 2500 கிலோ மீட்டர் தூரம் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதே போல் ஆளும் சமாஜ்வாடி தரப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசார யாத்திரையை முலாயம் தொடங்கி வைத்தார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் தேர்தல் பிரசார கூட்டத்தில் அனல் தெறிக்க பேசி வருகிறார்.
இந்தியாவே எதிர்பார்க்கும் உ.பி. சட்டமன்ற தேர்தல் குறித்து வார இதழ் ஒன்று கருத்து கணிப்பு நடத்தியது.
அதில் தற்போது உ.பி.யை ஆளும் சமாஜ்வாடி கட்சிக்கு 74 இடங்களே கிடைக்கும் என்றும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 169 இடங்களை பிடிக்கும் என்றும், பாரதியஜனதா 135 இடங்களையும், காங்கிரஸ் 13 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவித்து உள்ளது.
இம்முறை பாஜ மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு இடையிலேயே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது
1akhileshrhahul
மொத்தமுள்ள 403 பேர் கொண்ட  உ.பி. சட்டபேரவையில் 2013 தொகுதிகள் பெற்றால்தான் ஆட்சியமைக்க முடியும். ஆனால் தற்போதைய கருத்துக்கணிப்பில் எந்த ஒரு கட்சிக்கும்  பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இலலை என்றே இந்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
மேலும் தற்போதைய உ.பி. முதல்வர் பற்றிய கணிப்பில், அகிலேஷ் செயல்பாடுகள் குறித்து 39 சதவீதம் பேர் மோசம் அல்லது மிகவும் மோசம் என்று தெரிவித்துள்ளனர். 33 சதவீதம் பேர் சுமார் என்றனர். 28 சதவீதம் பேர் மட்டுமே அகிலேஷ் நிர்வாகம் நன்றாக உள்ளது என்றனர்.
அதே போல் அடுத்த முதல்வராக மாயாவதி வர வேண்டும் என 28 சதவீதம் பேரும், அகிலேஷூக்கு 25 சதவீதம் பேரும், பா.ஜ.க சார்ரபாக  வருண் காந்தி வர வேண்டும் என 23 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சுமார் 25ஆயிரம் பேரிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டதாக அந்த இதழ் கூறியுள்ளது.