காவலர்களை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

Must read

மதுரா:
காவலர்களை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்திரபிரதேச காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய, முன்னாள் சி.எல்.பி தலைவர் பிரதீப் மாத்தூர், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தொண்டர்களால் காவல்துறையினர் தாக்கப்பட்ட விதம் ஒட்டுமொத்த போலீசாரை மனச்சோர்வடையச் செய்துள்ளதாகவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதை விட, காவல்துறையினர் இடைநீக்கம் செய்யப்பட்டு கொலை முயற்சி குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். வலதுசாரி தொண்டர்கள் தங்கள் கைகளில் சட்டத்தை எடுத்துக் கொண்டு தண்டிக்கப்படாமல் அனுமதிக்கப்பட்ட இரண்டாவது சம்பவம் இது என்று அவர் குற்றம் சாட்டினார். இந்த சம்பவத்தின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது என்றும், அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மாத்தூர் கூறினார்.

More articles

Latest article