டோக்கியோ
டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் போட்டியில் உத்தர பிரதேச மாநில ஆட்சியர் சுகாஷ் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
கடந்த மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கிய மாற்றுத்திறணாளிககான பாராலிம்பிக் போட்டி இன்று முடிவடைந்தது. இன்று ஆடவருக்கான பாட்மிண்டன் எஸ் எல் 4 பிரிவின் இறுதிப்போட்டி நடந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சுகாஷ் எத்திராஜ் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்த போட்டியில் இவர் பிரான்ஸ் வீரர் மசூர் லூகாஸ் என்பவரிடம் 15-21, 21-17, 21-15 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இதுவரை இந்த போட்டிகளில் இந்தியா 4 தங்கம், 8 வெள்ளி, மற்றும் 8 வெண்கலப்பதக்கங்கல் என மொத்தம் 10 பதக்கங்களை வென்றுள்ளது.
சுகாஷ் உபி மாநில கவுதம் புத்தா நகர் மாவட்ட ஆட்சியராகப் பணி புரியும் 38 வயது இளைஞர் ஆவார். இவர் பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். சுகாஷ் வெள்ளிப்பதக்கம் வென்றதைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் பாராட்டி உள்ளனர்.