பாட்னா:

அரசியல் வாதியாக உருவெடுத்த சாமியாரும், சர்சைக்குறிய இந்துத்துவா வாதியுமான யோகி ஆதித்யாநத் உ.பி. மாநில 21வது முதல்வராகவும், பாஜ.வின் 4வது முதல்வராகவும் பதவி ஏற்று 15 கால போராட்டத்திற்கு முடிவு கட்டியுள்ளார். பாஜ மாநில தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் கட்சியின் தேசிய துணைத் தலைவர் தினேஷ் சர்மா ஆகியோருக்கும் அமைச்சர்களாக கவர்னர் ராம் நாய்க் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

44 வயதாகும் ஆதித்யாநாத்திடம் இவர்கள் இருவரும் துணை முதல்வர்களாக பணியாற்றவுள்ளனர். இதில் என்ன விசேஷம் என்றால் இவர்களில் யாருமே உ.பி.யில் தற்போது எம்எல்ஏ கிடையாது. கோராக்ப்பூர் தொகுதி எம்.பி.யான ஆதித்யாநத் எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித்ஷா, அத்வானி, முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், முலாயம் சிங் யாதவ் மற்றும் பல மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர். பாஜ தலைவர்களுடனேயே மோதல் போக்கை கடைபிடித்து வ ந்தவர் ஆதித்யநாத். முதல்வர் தேர்வில் ஆர்எஸ்எஸ் குறுக்கீடு காரணமாக இவர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2005ம் ஆண்டில் கிறிஸ்தவர்களை இந்துக்களாக மதமாற்ற இயக்கம் நடத்தினார்.

யோகாவை எதிர்ப்பவர்கள் இந்தியாவை விட்டுவெளியேற வேண்டும் என்று 2015ம் ஆண்டில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். 2007ம் ஆண்டில் நடந்த கோராக்ப்பூர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் அல்லது இஸ்லாம் குறித்து பிரிவினை கருத்துக்களை தெரிவித்து எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானார். சர்ச்சைக்குறிய இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என்றும், கிழக்கு உ.பி.யில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜ இந்துத்வா பிரச்சாரம் மேற்கொண்டார்.

இவ்வாறு செய்தவர் கடந்த 19ம் தேதி திடீரென மோடியின் வழியை பின்பற்றுவேன் என்று தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கு மாநிலத்தை முன்னெடுத்தி செல்வேன் என்று பதவி ஏற்ற பிறகு ராஜ்பவனில் நடந்த முதல் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,‘‘ சிறந்த நிர்வாகத்தை கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார். மேலும் இவரோடு 22 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.

இவருக்கு முன்பு பாஜ சார்பில் ராஜ்நாத் சிங், கல்யாண் சிங், ராம் பிரகாஷ் குப்தா ஆகியோர் உ.பி. முதல்வர்களாக இரு ந்துள்ளனர். பாஜ தவிர்த்து இதர கட்சிகளை சேர்ந்த சி.பி. குப்தா சரன் சிங், என்.டி. திவாரி, முலாயம்சிங் யாதவ், மாயாவதி, ஆகியோரும் முதல்வர்களாக இருந்துள்ளனர். மாயாவதி 4 முறையும், முலாயம் 3 முறையும் பதவி வகித்துள்ளனர். அகிலேஷ், மாயாவதி ஆகியோர் மட்டுமே முழு 5 ஆண்டு கால ஆட்சியை பூர்த்தி செய்துள்ளனர்.

இதில் மாயாவதி முதன் முறையாக பதவி ஏற்றபோது 4 மாதங்கள் மட்டுமே முதல்வராக இருந்தார். 1960ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சி காலகட்டத்தில் ஜி.பி. பான்ட், சம்பராணந்த், சி.பி.குப்தா, சுசிட கிரிபிலானி, டிஎன் சிங், கமலாபதி திரிபாதி, ஹேமாவதி நந்தன் பகுகுனா, வி.பி.சிங், ஸ்ரீபதி மிஸ்ரா, விர் பகதூர் சிங் ஆகியோர் பதவி வகித்துள்ளனர். இதில் சி பி குப்தா மட்டுமே 3 முறை முதல்வராக இருந்தார்.

சரன் சிங், ராம் நரேஷ் யாதவ், பனார்சி தாஸ் ஆகியோர் காங்கிரஸ் அல்லாத முதல்வர்களாக இருந்துள்ளனர். ஜனதா கட்சி ஆட்சியில் யாதவ் மற்றும் தாஸ் முதல்வர்களாக இருந்துள்ளனர். சரன் சிங் பாரதிய கிரான் தல் சார்பில் 2 முறை முதல்வராக இருந்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் மோஹ்சில் ரசா மட்டுமே ஆதித்யாநத் அரசின் அமைச்சராக பதவி ஏற்றுள்ள ஒரே ஒரு முஸ்லிம். இவரும் எம்.எல்.ஏ கிடையாது. தேர்தலில் ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட பாஜ நிறுத்தவில்லை.

துணை முதல்வர்கள் தவிர சூர்ய பிரதாப் சகாய், சுரேஷ்குமார் கண்ணால சுவாமி பிரசாத் மவுரியா, சதீஷ்மகானா, ராஜேஷ் அகர்வால், ரீட்டா பகுகுனா ஜோஷி, தாரா சிங் சவுகான், தரமபால் சிங், எஸ்பி சிங் பாகே, சத்யதேவ் பச்சாவ்ரி, ராமாபதி சாஸ்திரில ஜெய் பிரகாஷ் சிங், ஓம் பிரகாஷ் ராஜ்பர், பிரிஜேஷ் பதக், லஷ்மி நரைன் சவுத்ரி, சேட்டன் சவுகன், ஸ்ரீகாந்த் சர்மா, ராஜேந்திர பிரதாப் சிங், சித்தார்த் நாத் சிங், முகுத் பிகாரி வெர்மா, அசுதோஷ் தொண்டான், நந்தகோபால் குப்தா நந்தி ஆகியோர் அமை ச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர்.

ஆதித்யாநத் அரசில் 2 துணை முதல்வர்கள் உள்பட 24 கேபினட் அமைச்சர்கள், 9 பேர் தனி பொறுப்பு அமைச்சர்களாகவும், 13 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்றுள்ளனர்.