லக்னோ:

த்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா அரசு ஆட்சி  நடை பெற்று வருகிறது. அங்கு கடந்த மாதம் 10வது மற்றும் 12வது போர்டு தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வுகளின் முடிவுகள் கடந்த ஞாயிறன்று  வெளியானது. அதில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில், 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத அவலம் நிகழ்ந்துள்ளது. அந்த அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது.

இந்த 150 பள்ளிகளில், 98 பள்ளிகளில் எந்த மாணவரும் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற வில்லை என்றும், மேலும்  52 பள்ளிகளில் பாஸ் சதவீதம் பூஜ்ஜியமாக இருந்தது என்றும் அம்மாநில கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

உ.பி.யின் காஷிப்பூர் மாவட்டத்தில்தான் அதிக அளவிலான பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றும், ஆக்ரா மாவட்டத்தில் 9 பள்ளிகளிலும் ஜீரோ சதவித அளவிலான தேர்ச்சி என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் காஸிபூர், மிர்ஸாபூர், அலிகார் ஆகிய மாவட்டங்களில் தேர்ச்சி சதவிகிதம்  மோசமான நிலையில் இருக்கிறது. இதில் ஆச்சரியப்படத்தக்க தகவல் என்னவென்றால் அரசு பள்ளிகள் மட்டுமில்லாமல் தனியார் பள்ளிகளும் இதில் அடக்கம்.

மேலும் 237 பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 20சதவிகிதம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை இன்ஸ்பெக்டர் வினோத் குமார் ராய் தெரிவித்துள்ளார்.

உ.பி. அரசு கல்வித்துறையில்  எவ்வளவு அழகாக செயல்பட்டு வருகிறது என்பதை  இந்த தேர்வு முடிவுகள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.