டில்லி

ப்னா தள மற்றும் நிஷாத கட்சியுடன் கூட்டணி அமைத்து உத்தரப்பிரதேச தேர்தலில் போட்டியிடுவதை பாஜக உறுதி செய்துள்ளது.

வரும் பிப்ரவரி மாதம் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கி உள்ளன. தேர்தல் பிரச்சாரங்களுக்கு கொரோனா அச்சுறுத்தலா தேர்தல் ஆணையம் வரும் 22ம் தேதி வரை தடை விதித்துள்ளது.

இதனால், இணையம் மூலம் அனைத்து கட்சிகளும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்தியாவில்  அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 10ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.

இன்று அப்னா தள் மற்றும் நிஷாத கட்சி ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணியை பாஜக உறுதி செய்துள்ளது. டில்லியில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு அக்கட்சியின் தேசிய தலைவர் JP நட்டா இதனைத் தெரிவித்தார். தங்கள் கூட்டணி உத்தரப்பிரதேசத்தின் மொத்தமுள்ள 403 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாகவும் JP நட்டா தெரிவித்துள்ளார்.

அவர் இதை அறிவித்த போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.