பெங்களூரு

ரு இண்டிகோ விமானங்கள் பெங்களூருவில் மோத இருந்தது தவிர்க்கப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆம் தேதி அன்று பெங்களூரு விமான நிலையத்திலிருந்து காலை 5 நிமிட இடைவெளியில், இண்டிகோ விமான நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு விமானங்கள் டேக் ஆஃப் ஆகின. இவை பெங்களூருவில் இருந்து கொல்கத்தாவுக்குப் புறப்பட்ட 6E455 என்ற விமானமும், பெங்களூருவில் இருந்து புவனேஸ்வருக்கு புறப்பட்ட 6E246 விமானமும் ஆகும். அந்த இரு விமானங்களும் டேக் ஆஃப் ஆன நிலையில் வானில் ஒன்றோடு ஒன்று மோத இருந்தன.  இந்த மோதல் சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளதன் மூலம் பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பெங்களூரு விமான நிலையத்தின் வான் பரப்பில் நடைபெற்றது குறித்து எந்த லாக் புத்தகத்திலும் பதிவு செய்யப்படவில்லை,. விமான நிலைய ஆணையமும் தகவல் வெளியிடவில்லை.  ஆனால் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் தலைவர் அருண் குமார் இச்சம்பவம் குறித்துப் பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும், தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து அதிகாரி ஒருவர் அப்ரோச் ரேடார் கன்ட்ரோலர் திசைதிருப்பலைக் கொடுத்தது மற்றும் நடுவானில் மோதுவதைத் தவிர்த்தது என்று குறிப்பிட்டார். துபாய் விமான நிலையத்தில் சமீபத்தில் இரண்டு விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோத இருந்த சம்பவம் வெளியான நிலையில் தற்போது மேலும் அதே போன்றதொரு சம்பவம் இந்தியாவில் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.