லக்னோ: உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை  தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

உ.பி. சட்டமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.  11 மாவட்டங்களில் அடங்கிய 58 தொகுதிகளில் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்காக 25 ஆயிரத்து 849 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய தேர்தலிலி  2 கோடியே 27 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தலையொட்டி, 58 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

உ.பி. மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி மற்றும்  சமாஜ்வாதி கட்சியும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அங்கு 4 முனை போட்டி நிலவி வருகிறது. =