உத்திர பிரதேச மாநிலத்தில் நிலப்பதிவு செய்வதற்கு வரும் நவம்பர் 24-ஆம் தேதிவரை பழைய 500 மற்றும் 1000 நோட்டுக்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். மத்திய அரசின் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் தடையால் அம்மாநில மக்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை களையும் விதத்தில் இந்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் வெளியிட்டிருப்பதாக தெரிகிறது.
ஏழை விவசாயிகளை கருத்தில் கொண்டேனும் இந்த மத்திய அரசு சில கடுமையான நடவடிக்கைகளை தளர்த்தியிருக்கலாம். இது அறிவார்ந்த நடவடிக்கை அல்ல. இதன் பலனை மக்கள் இப்போது அனுபவித்து வருகிறார்கள் என்று பிரதமரின் 500,1000 நோட்டுக்கள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து அகிலேஷ் யாதவ் முன்னதாக கருத்து தெரிவித்திருந்தார்.