போபால்

த்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திறமையை வளர்த்துக் கொள்ளாதவர்கள் மட்டுமே தற்போது வேலை இழந்துள்ளனர் என கூறி உள்ளார்.

போபாலில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கலந்துக் கொண்டார்.   அப்போது பத்திரிகையாளர்கள் அவரிடம் பண மதிப்புக் குறைப்பு நடவடிக்கை, அதனால் வேலை இழப்பு ஏற்பட்டது குறித்து கேள்விகள் கேட்டனர்.  அதற்கு அமைச்சர் பதில் அளித்தார்.

அமைச்சர் தனது பதிலில், “வேலை என்பதற்கும் வேலை வாய்ப்பு என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.   தங்கள் திறமையை காலத்துக்கேற்ப வளர்த்துக் கொள்ளாதவர்கள் வேலையை இழக்கின்றனர்.   மற்றவர்கள் யாரும் வேலை இழப்பதில்லை.   என்றுமே திறமையற்றவர்கள் வேலையை இழப்பது வழக்கமே.   முத்ரா திட்டத்தின் கீழ் தகுதி உள்ளவர்களுக்கு ரூ. 4 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.  இதனல் பயனடைந்த 8 கோடி பேர்களில் பலர் சிறு வியாபாரிகள், கைவண்டி இழுப்போர்,  சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்பினர்கள் ஆவார்கள்.   இவர்கள் அனைவரும் ஆளுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு அளித்தாலும் நான்கு கோடிக்கும் மேல் வேலை வாய்ப்பு தானாகவே உருவாகும்.

தகவல் தொழில் நுட்பத்துறையில் பலர் வேலை இழந்துள்ளனர் என சொல்லும்போது ஆறு லட்சம் புதிய வேலை வாய்ப்புக்கள் அதே துறையில் உருவாகி உள்ளதை யாரும் சொல்வதில்லை.    திறமை உள்ள பலர் வேலை வாய்ப்பை அடைந்துள்ளனர்.  நாங்கள் ஆட்சி அமைக்கும் போது இரண்டு மொபைல் தொழிற்சாலைகள் இருந்த இடத்தில் தற்போது 108 உள்ளன.   நொய்டா பகுதியில் மட்டும் மொபைல் சம்பத்தப்பட்ட 32 தொழிற்சாலைகள் அமைந்துள்ளன” என குறிப்பிட்டார்.