நியூயார்க்:

மாலியின் அமைதி காக்கும் பணி மீதான தாக்குதலை ஐநா பாதுகாப்பு குழு கடுமையாக கண்டித்துள்ளது.

அமைதிகாக்கும் பணிக்கு எதிராக கடந்த வாரம் மாலியில் நடந்த தாக்குதலில் எகிப்தை சேர்ந்த பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டார், இதனை ஐநா பாதுகாப்பு குழு கடுமையாக கண்டித்துள்ளது.

இது தொடர்பாக ஐநா பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஐநா பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் இந்த வழக்கை விரைவாக விசாரிக்கவும், குற்றவாளிகளை நீதிக்கு முன் கொண்டு வந்து நிறுத்தவும் மாலியின் இடைக்கால அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் அமைதி காக்கும் படையினரை குறி வைக்கும் இது போன்ற தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் போர்குற்றங்களாக இருக்கும் என்பதையும் அடிக்கோடிட்டு காட்டியுள்ளது ஐநா பாதுகாப்பு குழு.

மேலும் இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களும் தீவிரமாக ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர், அதுமட்டுமல்லாமல் இதுதொடர்பாக ஐநா பாதுகாப்பு குழுவிற்கு மாலி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.