98 வயதாகும் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி அஜித்தின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

3 வாரங்களுக்கு முன்பு உன்னிகிருஷ்ணனுக்கு நிமோனியா ஏற்பட்டு கண்ணூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது அவருக்கு செய்த பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது.

உடல்நலம் தேறிய பிறகு உன்னிகிருஷ்ணன் வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்த இரண்டு நாளில் அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. இம்முறை செய்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

அவரை தீவிர சிகிச்சை பிரிவில் இரண்டு நாட்கள் வைத்திருந்தார்கள். அதன் பிறகு அவர் குணமாகிவிட்டார். ஞாயிற்றுக்கிழமை செய்த பரிசோதனையில் கோவிட் நெகட்டிவ் என்று வந்தது.

உன்னிகிருஷ்னன் இளமை பருவத்திலிருந்தே உடல்நலனில் அதிக அக்கறை கொண்டவர். அவர் பாடிபில்டராகவும் இருந்தவர். உன்னிகிருஷ்ணன் நம்பூதிரியின் லைஃப்ஸ்டைல் தான் அவர் கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணமாக உதவியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

[youtube-feed feed=1]