திருமணமாகாத “ஜோடி”களுக்கு சில ஒட்டல்களில் அறைகள் தருவதில்லை. “கணவன் மனைவி என்பதற்கான சான்று இருக்கிறதா” என்பதே இந்த ஓட்டல்களில் முக்கியமான கேள்வியாக இருக்கும்.
இந்த நிலையில், “திருமணம் ஆகாத ஜோடிகள் ஓரு இரவை ஓட்டலில் கழிக்க விரும்பினால் அவர்களுக்கு அறை வசதி ஏற்படுத்தருகிறோம்” என்று புதிதாக சில நிறுவனங்கள் களத்தில் குதித்திருக்கின்றன.
feet-sex-survey
‘ஸ்டே அங்கிள்’ (Stay Uncle), ‘ஓயோ ரூம்ஸ்(OYO Rooms) உள்ளிட்ட ஸ்டார்ட் அப்’கள்  ரிலேஷன்ஷிப் மோட்’ (Relationship Mode) என்ற பெயரில் இந்த சேவையைச் செய்ய களத்தில் குதித்துள்ளன.
இந்த ஓயோ ரூம்கள், இந்தியா முழுவதும் 100 நகரங்களில் இருப்பதாக இந்த சேவை நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். தவிர,  இந்தியா முழுதும் 200 நகரங்களில் உள்ள 6500 ஓட்டல்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி இந்த சேவையை அளிக்கின்றனராம்.
இந்த ஓட்டல்களில் திருமணமாகாத ஜோடிகள், தங்களது உள்ளூர் அடையாள அட்டைகளை காண்பித்தால் போதும். எந்தவித தொந்தரவும் இன்றி தங்கலாம்.
தங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ஹோட்டல்கள், திருமணமாகாத ஜோடிகளை உள்ளூர் அடையாள அட்டைகள் இருந்தால் கூட எந்தவித தொந்தரவும் இன்றி அனுமதிக்கின்றன.
ஓயோ நிறுவனத்தின் தலைமை வளர்ச்சி அதிகாரி கவிக்ருட், “திருமணமாகாத ஜோடிகளுக்கு அறைகள் கொடுக்கக்கூடாது என்று எந்தவொரு சட்டமும் கிடையாது. ஆனால் உண்மை நிலை வேறு. திருமணமாகாத ஜோடிகளை பல ஓட்டல்களில் அனுமதிப்பதில்லை. ஆகவே இது போன்ற ஜோடிகள் தங்க அறைகள் கிடைக்காமல் தவிக்கும் நிலை உள்ளது. இந்த இக்கட்டைப் போக்குவதே எங்கள் சேவையின் நோக்கம்” என்கிறார்.
மேலும் இவர், “எங்கள் நிறுவனத்தின்  இணைய தளம் மற்றும், செயலியில் எந்தெந்த ஓட்டல்களில் தங்கலாம் என்ற பட்டியல் உள்ளது.
போன் செயலியில், ‘மை அக்கவுன்ட்’ என்ற பிரிவில் ரிலேஷன்ஷிப் என்ற இடத்தில் தகவலை பதிந்தவுடன் ‘ரிலேஷன்ஷிப் மோட்’ என்ற பயன்பாடு ஒளிரும்.  இதை அனைவரும் எளிதாக பயன்படுத்தலாம்” என்கிறார்.
திருமணமாகாத ஜோடி, சாலையில் கைகோர்த்துச் சென்றாலே வித்தியாசமாக பார்க்கும் சமுதாயத்தில் இது ஒரு “புரட்சி”தான். அதே நேரம், காதலர் தினமே கொண்டாடக்கூடாது என போர்க்கொடி தூக்கும் “கலாச்சாரக் காவலர்கள்” இந்த “ஓட்டல் சேவை”க்கு எந்தமாதிரியான எதிர்ப்பு காட்டுவார்களோ?