சென்னை: தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில செப்டம்பர் 30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்படுவதற்கான தடை தொடரும் என அரசு அறிவித்துள்ளது.
திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இ பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் வகையில் மாவட்டங்கள் இடையே செல்ல இ பாஸ் தேவையில்லை என அரசு கூறியுள்ளது.
வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்குள் வருவோர் இ பாஸ் எடுத்துவர வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது.
வணிக வளாகங்கள், ஷோ ரூம்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்கலாம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் இனி முழு பொதுமுடக்கம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் செப்டம்பர் 7ஆம் தேதி மெட்ரே ரயில் சேவை இயக்கம் என தமிழக அரசு கூறியுள்ளது.
மாவட்டங்களுக்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலும் ஒன்றாம் தேதி முதல் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி.
கொரோனா நெறிமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இரவு 8 மணி வரை கடைகள் இயங்கலாம்.