சென்னை: சென்னையில் செவ்வாய்க்கிழமை முதல் பேருந்து சேவை தொடங்கும் என்றும் வரும் 7ந்தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்றும் தமிழக அரசு அறிவித்து உள்ளது.

மேலும், மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து தொடங்கலாம் என்றும், ஆனால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை தொடர்வதாகவும் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில், பொதுமுடக்கம் செப்டம்பர் இறுதி வரை நீட்டித்துள்ள தமிழக அரசு பல்வேறு தளர்வுகளையும் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில செப்டம்பர் 30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால்,  வணிக வளாகங்கள், ஷோ ரூம்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்கலாம் என பச்சைக்கொடி காட்டி உள்ளது.

மேலும், சென்னை மக்களின் வசதிக்காக  செப்டம்பர் 7ம் தேதி மெட்ரே ரயில் சேவை இயக்கம் என தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

மாவட்டங்களுக்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலும் ஒன்றாம் தேதி முதல் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

ஆனால் ,மாவட்டங்களுக்கு இடையேயான பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதியில்லை. அதற்கான தடை தொடர்கிறது. மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தளர்வுகளின்போது, பொதுமக்களும் நிறுவனங்களும் கண்டிப்பாக  கொரோனா நெறிமுறைகள் கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.