சென்னை

மிழகத்தில் பி எட் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வு வினாத்தாள் லீக் ஆனதால் பல்கலைக்கழக பதிவாளர் நீக்கப்பட்டு புதிய பதிவாளர் நியமிக்கபட்டுள்ளார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பி எட்4-வது செமஸ்டர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 27ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலைஇல் இன்று நடைபெற வேண்டிய creating an inclusive school என்கிற பாடத்திற்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்பே லீக் ஆனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தேர்வ்க்கு முதல்நாளே தேர்வு நடைபெறும் இடங்களுக்கு, தேர்வின் முதல்நாளே வினாத்தாள்கள் சீலிட்ட கவர்களில் அனுப்பப்பட்டு தேர்வு நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக சீலிட்ட கவர் பிரிக்கப்பட்டு வினாத்தாள்கள் தேர்வர்களுக்கு வழங்கப்படும். நேற்று இரவே creating an inclusive school என்ற பாடத்தின் தேர்வுக்கான வினாத்தாள் இணையத்தில் லீக் ஆனது.

லீக் ஆன செய்தி வெளியான உடனேயே ஏற்கனவே அனுப்பிய வினாத்தாளை பயன்படுத்தக் கூடாது என தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உத்தரவிட்டது   ஏற்கனவே அனுப்பப்பட்ட வினாத்தாள்கள் கொண்ட சீலிட்ட கவரை அப்படியே திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் அனைத்து தேர்வு நடத்தும் கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வின் வினாத்தாளை முன்கூட்டியே கசிய விட்டது யார்? யார் யாருக்கு இதில் தொடர்பு உள்ளது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இன்று காலை 10 மணிக்கு தேர்வு துவங்கும் முன்பாக இணையதளம் மூலம் வேறு வினாத்தாள்கள் அனுப்பப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டன.

வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்காக, 195 பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ள தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விசாரணையில், பல்கலைக்கழகத்தில் இருப்பவர்களே கேள்வித்தாள்களை 2000 ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. எனவே ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் ராமகிருஷ்ணன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். புதிய பதிவாளராக ராஜசேகரை நியமித்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.