டில்லி,
பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும் நிதிநிலை அறிக்கையில், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி.
ஏற்கனவே நாட்டில் அமல்படுத்தி உள்ள பண மதிப்பிழப்பு, டிஜிட்டல் பரிவர்த்தனை, ஜிஎஸ்டி போன்றவைகளால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், குறிப்பாக விவசாயிகள், கிராமபுற மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி, மத்திய பாஜக அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ள தற்போதைய சூழலில், அவர்களை குறி வைத்து இன்றைய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அடுத்து வர உள்ள நாடாளுமன்ற தேர்தலை மனத்தில் வைத்து, விவசாயம் மற்றும் கிராமப்புறத்திற்கு முன்னுரிமை கொடுக்க இருப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் மேலும் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிதி அமைச்சர், நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ஓரியண்டன் இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் நேஷனல் இன்சூரன்சு நிறுவனத்தை ஒன்றாக இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.