புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி ஏற்படுத்தவுள்ள புதுமை மையத்தின் தலைவராக தேர்வாகியுள்ளார் இன்போசிஸ் இணை நிறுவனரான கிரிஸ் கோபாலகிருஷ்ணன்.
தொழில்நுட்பம் போன்றவைகளை மேம்படுத்தி, நிதித்துறையில் புதுமைகளை ஏற்படுத்தும் நோக்கில், இந்தப் புதுமை மையத்தை அமைக்கவிருப்பதாக, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்தது ரிசர்வ வங்கி.
இந்நிலையில், இந்தப் புதுமை மையத்தின் இயக்குநராக, இன்போசிஸ் நிறுவனத்தின் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரிசர்வ் வங்கியின் புதுமை மையம், தலைவர் மற்றும் குழு உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படும். உறுப்பினர் குழுவில், ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலா, டிவிஎஸ் கேபிடல்ஸ் பண்ட்ஸ் நிறுவன தலைவர் கோபால் சீனிவாசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் தவிர, சிண்டிகேட் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மிருத்யுஞ்சய் மஹாபத்ரா, ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநர் டிரவி ஷங்கர் ஆகியோரும் உறுப்பினர் குழுவில் உள்ளனர்.