டெல்லி: மத்திய மந்திரி சபை விரிவாக்கத்தைத்தொடர்ந்து, இன்று மாலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே நேற்று முன்தினம்,பின்னர் நேற்று  கேபினட் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று புதிய மந்திகளுடன் மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெறுகிறது.

மோடி தலைமையிலான பாஜக கூட்டணி மந்திரி சபையில், முதன்முறையாக நேற்று அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. மந்திரிசபையில் மாற்றங்கள் செய்ய வசதியாக 12 முக்கிய மந்திரிகள் நேற்று ராஜினாமா செய்தனர். இதையடுத்து,  கூட்டணி கட்சியினருக்கு மந்திரி பதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. மொத்தம் 43 பேர் மந்திரிகளாக நேற்ற பதவி ஏற்றனர். பதவி ஏற்பு விழா, ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை நடந்தது. புதிதாக பதவி ஏற்றவர்களுக்கு  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து,  இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டமும், இரவு 7 மணிக்கு அமைச்சர்கள் குழு கூட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.