ஜெய்ப்பூர்

ரும் 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியா 100% எழுத்தறிவு உள்ள நாடாக ஆகிவிடும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளி நிறுவனம் இணைந்து கல்வித்திருவிழா ஒன்றை நடத்தியது.  இதில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், முதல்வர் வசுந்தரா ராஜே, மாநில பள்ளிக்கல்வி துறை அமைச்சர் வாசுதேவ் தேவனானி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.  இந்த விழாவை துவங்கி வைத்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது :

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 18% மக்கள் மட்டுமே எழுதப்படிக்க தெரிந்தவர்களாக இருந்தனர்.  தற்போது அது 80% ஆக உயர்ந்துள்ளது.  இது இன்னும் 5ஆண்டுகளில் 100$ ஆக உயர்வடையும் என நம்புகிறேன்.  அதற்கு பள்ளி மாணவர்கள், தங்கள் வீட்டிலுள்ள படிப்பறிவு இல்லாத பெரியவர்களுக்கு படிப்பு கற்றுத்த தரவேண்டும்.  அதற்கான பயிற்சியை பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்.

பள்ளிக் கல்வியை மாணவர்கள் ரசிக்கும்படி பள்ளிகள் மாற்றியமைப்பதன் மூலம் மாணவர்கள் இடையில் கல்வியை நிறுத்துவதை தவிர்க்க முடியும்.   ராஜஸ்தான் மாநிலத்தில் அரசுப் பள்ளிகள் பல விதத்திலும் முன்னேற்றம் அடைந்துள்ளதை நான் பாராட்டுகிறேன்.  இங்குள்ள அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு எந்த வித்த்திலும் சளைத்தவை அல்ல.

என அமைச்சர் தன் உரையில் தெரிவித்துள்ளார்.