போபால்

ந்துக்களால்தான் இந்திய ஜனநாயகம் பாதுகாப்பாக உள்ளது என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறி உள்ளார்.

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டு நேற்று சிறப்புரை ஆற்றி உள்ளார்.  அப்போது இந்திய ஜனநாயகம் குறித்து அவர் உரையில் கருத்து தெரிவித்துள்ளார்.

அமைச்சர், “இந்துக்களால் தான் இந்தியாவில் ஜனநாயகம் பாதுகாக்கப் படுகிறது.   இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை இங்கு ஜனநாயகமும் பாதுகாப்புடன் இருக்கும்.   இந்துக்களின் பெரும்பான்மை குறைந்தால் ஜனநாயகம் மற்றும் சமூக நல் இணக்கத்துக்கு இந்தியாவில் கடும் அபாயம் ஏற்படும்.

உத்திரப்பிரதேசம், அசாம், மேற்கு வங்கம், கேரளா ஆகியவற்றில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.  அதுவும் உத்திரப் பிரதேசத்தில் 54 மாவட்டங்களில் மிகவும் அதிகமாக இஸ்லாமியர் உள்ளனர்.  இந்த மாவட்டங்களினால் நமது நாட்டின் ஒற்றுமைக்கு நிச்சயம் அச்சுறுத்தல் உண்டாகும்.

அனைத்து மதத்தினருக்கும் குடும்பக் கட்டுப்பாடு கட்டாயம் ஆக்க வேண்டும்.   இந்தியாவில் பிரிவினைக்குப் பிறகு இந்துக்களின் மக்கட் தொகை குறைந்து இஸ்லமியர்களின் மக்கட் தொகை அதிகரித்துள்ளது.   இதனால் ஜனநாயகத்துக்கு நிச்சயம் அச்சுறுத்தல் உண்டாகும்” என கூறி உள்ளார்.