டெல்லி: எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது/ மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மசோதாவை தாக்கல் செய்தார்.
நாடாளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று காலை வழக்கம்போல் அவை கூடியது. தொடர்ந்து, மக்களவையில் இன்று கேள்வி நேரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் அறிக்கைகள், துறை சார்ந்த அறிக்கைகளை அமைச்சர்கள் தாக்கல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அரசியலமைப்பு (129வது திருத்தம்) சட்டத்தை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அறிமுகம் செய்தார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். மக்களவையில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை இருந்தால் மட்டுமே இந்த மசோதா நிறைவேறும். ஆனால், பாஜகவுக்கு மக்களவையில் போதிய பெரும்பான்மை இல்லாதபோது நிறைவேற்ற முடியாத மசோதாவை கொண்டு வருவது ஏன்? என ர் கேள்வி எழுப்பியுள்ளார்.