டெல்லி: வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான புதிய போர்ட்டலை ஜூன் 6 ஆம் தேதி மத்திய அரசு தொடங்க உள்ளது.
வஃபு சொத்துக்கள் தொடர்பாக மத்தியஅரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தன் சில விதிகளுக்கு மத்தியஅரசு இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிலையில், வக்பு சொத்துக்களை பதிவு செய்ய புதிய இணையதளம் தொடங்கம் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த இணைய தளம் வரும் 6ந்தேதி (ஜுன் 6) தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மத்திய அரசு நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்பு திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது தொடர்பாக காரசார விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. விசாரணையின்போது, வஃபு சட்டத்தின் சில விதிகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், சில விதிகளை தற்போதைக்கு செயல்படுத்த மாட்டோம் என்று அரசாங்கம் உறுதியளித்ததை அடுத்து, ஏப்ரல் 17 அன்று உச்ச நீதிமன்றம் சட்டத்தை நிறுத்தி வைக்க மறுத்துவிட்டது. மே 27 அன்று நடந்த சமீபத்திய விசாரணையின் போது, இந்த விஷயத்தில் மத்திய அரசு மற்றும் பிற தரப்பினரிடமிருந்து உச்ச நீதிமன்றம் பதில்களைக் கோரியது.
இந்த மசோதா, இந்திய அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை எனவும், இதனால் வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என சமத்தியஅரசு வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் நாடு முழுவதும் வக்பு சொத்துக்களை வெளிப்படைதன்மையுடன் மேலாண்மை செய்வதற்கு வசதியாக ‘உமீத்’ எனும் போர்ட்டலை (இணையதளம்) மத்திய அரசு வருகிற 6-ந்தேதி தொடங்க உள்ளது. இந்த இணையதளமானது, ‘ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாடு’ என்பதைக் குறிக்கும் இந்த போர்டல், நாடு முழுவதும் வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான மையப்படுத்தப்பட்ட தளமாக செயல்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த திட்டத்தின்படி அனைத்து வக்பு சொத்துக்களும் அடுத்த 6 மாதங்களுக்குள் இந்த போர்ட்டலில் பதிவு செய்யப்பட வேண்டும். சொத்துக்களின் நீளம், அகலம் மற்றும் புவிசார் குறிசொற்கள் உள்ள இடங்கள் உள்ளிட்ட விரிவான விபரங்களுடன் சொத்து விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளது. . அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல் பதிவு செய்யப்படாத சொத்துக்கள் சர்ச்சைக்குரியதாக எடுத்துக்கொள்ளப்படும். அதன் பிறகு அந்த சொத்துக்கள் தீர்வுக்காக வக்பு தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.