டெல்லி: நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், எரிபொருள் மீதான கலால் வரியை மத்தியஅரசு பூஜ்யமாக குறைத்து உத்தரவிட்டு உள்ளது.

எரிபொருள் மீதான கலால் வரியைக் குறைத்து, பெட்ரோல் வரியை லிட்டருக்கு ரூ.13-லிருந்து ரூ.3 ஆகவும், டீசல் வரியை லிட்டருக்கு ரூ.10-லிருந்து பூஜ்ஜிய மாகவும் குறைத்து, நுகர்வோருக்கு ஒரு பெரிய நிவாரணத்தை மத்திய பாஜக அரசாங்கம் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தது. அதிகரித்து வரும் விலை அழுத்தங்களுக்கு மத்தியில், இரு எரிபொருள்களுக்கும் லிட்டருக்கு ரூ.10 குறைக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, குடும்பங்கள் மற்றும் வணிகங்களின் சுமையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா – ஈரான் போரால் கச்சா எண்ணெய் முறையாக கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும். இதன் காரணமாக நுகர்வோர் பயனடைவார்கள்.
அந்த வகையில், பெட்ரோல் மீதான கலால் வரியை மத்தியஅரசு லிட்டருக்கு ரூ.13ல் இருந்து ரூ.3ஆக குறைத்தது. கலால் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படுமா என்பது விரைவில் தெரிய வரும்.
[youtube-feed feed=1]