சென்னை :  கொளத்தூர் அனிதா அகாடமியில் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழும், மடிக்கணினியும் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் உரையாற்றியபோது, நீட் தேர்வு மற்றும் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

“நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலுக்கு ஒரு நாள் ஒன்றிய அரசு பணியத்தான் போகிறது. இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளை அல்லது நாளை மறு நாள் நடந்துதான் தீரும்” என நம்பிக்கை தெரிவித்தவர், புதிய கட்சி தொடங்குபவர்கள் கூட தி.மு.க அழிய வேண்டும் என்று நினைக்கின்றனர்  என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை மறைமுகமாக விமர்சித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் முதல்வர் படைப்பகத்தை திறந்து வைத்ததுடன், அங்கு பெண்கள் கணினி கற்பதற்காக கொளத்தூரில் அமைக்கப்பட்டுள்ள அனிதா அகாடமியில் 13-வது பேட்ச்சாக பயிற்சி முடித்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சான்றிதழை வழங்கி  கணினி வழங்கி வாழ்த்தினார். அதன்படி,   105 பேருக்கு கணினியும், 360 பேருக்கு தையல் இயந்திரமும் வழங்குகிறார்.

நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின்,  நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் போராட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒரு நாள் பணியத்தான் போகிறது என்று  கூறியதுடன்,  “எவ்வளவு நெருக்கடியான வேலைகள் இருந்தாலும் கொளத்தூருக்கு வந்தால் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டு விடும். ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கிறது நீட் தேர்வு. எளியோரின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் குரல் தொடரும்.ஒன்றிய அரசு வெளியிடும் புள்ளி விவரங்களில் முதன்மையான மாநிலமாக தமிழ்நாடுதான் விளங்குகிறது,

 கட்சி, அரசு என எத்தனை வேலைகள் இருந்தாலும் கொளத்தூர் தொகுதிக்கு வந்தால் மகிழ்ச்சி ஏற்பட்டுவிடும். * கொளத்தூர் தொகுதியில் குறிப்பாக அனிதா அகாடமி விழா என்றால் புத்துணர்ச்சி பெற்று விடுவேன்.

அனிதா நம்மை விட்டு பிரிந்தபோது தாங்க முடியாத வேதனையில் ஆழ்ந்தோம்.  நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்தில் நாம் வெல்வோம்  மத்திய அரசு அடிபணிந்து தான் ஆக வேண்டும்

தமிழக இளைஞர்களை எல்லாம் நிலைகளில் இருந்தும் தகுதியுடைவர்களாக மாற்றுவதுதான் திராவிட மாடலின் லட்சியம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ஆனால் இன்னைக்கு இந்த ஆட்சி எதுவும் செய்யவில்லை என குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இதையெல்லாம் அவர்கள் பார்க்கனும். யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, மூன்றரை ஆண்டுகளாக பல திட்டங்கள நிறைவேற்றி வருகிறோம்.

கலைஞர் இலவச கண் மருத்துவ மையத்தில் ஓராண்டில் 7,012 பேர் கண் சிகிச்சை பெற்றுள்ளனர்.

.தமிழ்நாட்டு இளைஞர்களை எல்லா வகையிலும் தகுதியுடையவர்களாக மாற்றுவதே திமுக அரசின் லட்சியம்.

அரசின் திட்டங்கள் பற்றி முழுமையாக அறியாமல் எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றன.

இந்தியாவில் பல்வேறு துறைகளில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதாக மத்திய அரசு அறிக்கை வெளியிடுகிறது.

கோட்டைகளில் இருந்து பிறப்பிக்கப்படும் திட்டங்கள் களத்தில் வெற்றி பெறுகிறதா? என ஆய்வு செய்வதால் தமிழகம் முதலிடம்.

சென்னையில் பெய்த தொடர் மழையிலும் கூட தண்ணீர் தேங்காமல் திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.

திமுக அரசின் செயல்பாடுகளை கண்காணிக்க நாளை கோவை மாவட்டத்திற்கு செல்கிறேன் என்று கூறினார்.

தேர்தலின்போது கூறிய உறுதி மொழிகளை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். மீதமுள்ள ஒன்றிரண்டு உறுதி மொழிகளை வரும் காலத்தில் உறுதியாக நிறைவேற்றப் போகிறோம். இதில் எந்த மாற்றமும் கிடையாது.

தொழிலில் தமிழ்நாடு முதல் இடத்தை பெற்றிருக்கிறது. தொலைநோக்கு அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

சென்னையில் இரண்டு நாட்கள் தொடர்ந்து பெய்த மழைக் காரணமாக தேங்கிய தண்ணீர் தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு அடுத்த நாள் தண்ணீர் இல்லாத அளவிற்கு மாற்றியது. இதை சில மீடியாக்கள் கடந்த வருடம் தேங்கிய தண்ணீர் படத்தை போட்டு பார்த்தீர்களா, தண்ணீர் தேங்கியிருக்கு எனப்போட்டது. திமுக வளர்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை. அதான் காரணம்.

அதனால்தான் யார் யாரோ, வருகிறவர்கள் எல்லாம், புதுசா புதுசா கட்சி தொடங்கிறவர்கள் எல்லாம் தி.மு.க. அழிய வேண்டும் என்ற நிலையில்தான் போய் கொண்டு இருக்கிறார்களே தவிர… ]

விமர்சனம் செய்பவர்கள் இந்து மூன்றரை ஆண்டு சாதனைகளை எண்ணிப் பாருங்கள். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் வாழ்க வசவாளர்கள். அதை பற்றியும் நாங்கள் கவலைப்படபோவதில்லை. எங்களுடைய போக்கு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான்.  தேவையில்லாமல் எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தேவையும் இல்லை. நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

மக்களுக்கு பணியாற்றவே நேரம் கிடைக்கவில்லை. எந்த நம்பிக்கையில் எங்களை நம்பி ஆட்சியை ஒப்படைத்தீர்களோ, அந்த நம்பிக்கையுடன் பணியாற்ற காத்திருக்கிறோம்.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.