முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகள் ஆறு பேர் விடுதலை ஆனதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்தியாவின் எதிர்காலத்தையும் 130 கோடி மக்களின் எதிர்காலத்தையும் சீரழிக்கும் நோக்கோடு இந்தியாவுக்குள் ஊடுருவி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்து நாசகார செயலில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட ஆறு பேர் நவம்பர் 11 ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் தண்டனை காலம் முடிந்தும் ஜெயிலில் இருப்பதால் ஏற்கனவே விடுதலையான நிலையில் அதனை சுட்டிக்காட்டி மற்ற ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

மும்பை தீவிரவாத தாக்குதலை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்திய இந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் ராஜீவ் காந்தி தவிர 17 பேர் உயிரிழந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக 2018 ம் ஆண்டு அப்போதைய தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் குற்றவாளிகளை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.

வெடிகுண்டு செய்வதில் கைதேர்ந்த முருகன் உள்ளிட்ட இலங்கையைச் சேர்ந்த நான்கு குற்றவாளிகளும் திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மிக முக்கியமான இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கலந்தாலோசிக்கவில்லை என்று கூறி உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

இலங்கையில் இருந்து ஊடுருவிய ராஜிவ் காந்தி கொலையாளிகள் 4 பேரும் எங்கு செல்வார்கள் ? அகதிகள் முகாமுக்கா அல்லது இலங்கைக்கா ?