டெல்லி: 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், இன்று மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நடைபெற்ற வருகின்றன. பட்ஜெட் தொடர்பாக பல தரப்பினரை சந்தித்து ஆலோசனை பெற்று வரும் நிதி அமைச்சர் நிர்மலா, நேற்று பட்ஜெட் தொடர்புடைய 7 குழுக்களின் 120 அழைப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து, இன்று அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிதி மந்திரிகள் கூட்டத்தை கூட்டி உள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில், கொரோனா பாதிப்பு, ஒமிக்ரான பாதிப்பு, அதனால் ஏற்படும் அதிக செலவினங்கள் மட்டுமின்றி, 5 மாநில சட்டமன்ற தேர்தல், அதற்கான செலவினங்கள், மாநிலங்களின் கோரிக்கைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கீடு, டிஜிட்டல் சேவைகளுக்கு உள்கட்டமைப்பு தகுதி, வருமானவரி வரையறைகளை சீர்படுத்துவது, ஜிஎஸ்டி உள்பட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.