நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவைக் கூட்டம்: விவசாயிகள் போராட்டம், கொரோனா தொற்று குறித்து ஆலோசிக்க வாய்ப்பு

Must read

டெல்லி: பரபரப்பான சூழலில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநில விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டம் 27வது நாளை எட்டி உள்ளது.

இந் நிலையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற உள்ளது. பாதுகாப்பு அமைச்சரவை குழு மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டங்களும் நாளை நடக்க உள்ளன.

கூட்டத்தில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ், கொரோனா தடுப்பூசி நிலை, விவசாயிகள் தொடர் போராட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. முன்னதாக கடந்த 16ம் தேதி அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article