
டில்லி:
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் கூடுகிறது.
ஏற்கனவே கடந்த பிப்ரவரி 1ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று மாலை மீண்டும் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பிஎன்பி மற்றும் ஓரியண்டல் வங்கி மோசடி மற்றும் நிரவ் மோடியின் 11,500 கோடி மோடி குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும் வங்கி மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
Patrikai.com official YouTube Channel