டெல்லி:
நாடாளுமன்ற அவைகளில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மதியம் 1 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மோடி தலைமையிலான அரசு, நடப்பு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், சிறுபான்மை மக்களுக்கு எதிரான குடியுரிமை சட்ட த்திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மாநிலங்களவையில் இன்று விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கடந்த 2 நாட்களாக அசாம், திரிபுரா உள்பட பல மாநிலங்களில் கடைஅடைப்பு, சாலை மறியல், தீ வைப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று மதியம் மத்திய அமைச்ச ரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]