டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையை வாசித்து வருகிறார். இதில், மாநில மொழி கல்வி ஊக்கு ஊக்குவிப்பு, கிசான் ட்ரோன் திட்டம், ஏழைகளுக்கு வீடுகள் கட்ட 48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, குடிநீர் இணைப்பிற்காக ரூ. 60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய நிலையில் காலை 11 மணிக்கு மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் அமைச்சர், மாநில மொழி கல்வி ஊக்குவிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.  கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு மன ரீதியாக சிகிச்சைகள் அளிக்க மையங்கள் உருவாக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று காலத்தில் கிராமப்புற பகுதிகளில், குறிப்பாக பட்டியல் இன, பட்டியல் பழங்குடி மாணவர்கள் அதிகப்படியாக பாதிக்கப்பட்டனர். அதனை கருத்தில் கொண்டு தொலைக்காட்சிகள், இணையம் வழியாக டிஜிட்டல் பாட திட்டங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

1-12ம் வகுப்புகளுக்கு மாநில மொழிகளில் பாடங்களை கற்றுத்தர 200 கல்வி சேனல்கள் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

விவசாய நிலங்களை கிசான் டிரோன் திட்டம் கொண்டு வரப்படுகிறது.  டிரோன் மூலம் நிலங்களை அளப்பது மற்றும் வேளாண் விளைச்சலை கணிப்பது போன்ற பணிகளுக்கு கிசான் ட்ரோன் திட்டம் பயனளிக்கும் என்றும் அமைச்சர் அறிவிப்பு.

ஏழை மக்களுக்கு 18 லட்சம் வீடுகள் கட்ட ரூ. 48 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என்றும்  குடிநீர் இணைப்பிற்காக ரூ. 60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதலாக 48 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்டுவதாகவும்,  நாடு முழுவதும் 2023ஆம் ஆண்டுக்குள் 18 லட்சம் வீடுகள், குறைந்த விலையில் கட்டப்படும் என்றும், நாட்டின் குடிமக்களின் தரத்தை மேலும் உயர்த்திட மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டிஜிட்டல் பேங்கிங்க், இண்டெர்நெட் பேங்கிங் போன்றவை அதிகமாக வளர்ந்துள்ளது. இந்த வசதிகள் அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதை அரசு உறுதி செய்யும். 75 டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டுகள் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் 75 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்படும்.