டெல்லி:

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, அந்த க காலகட்டத்தில் 800 மில்லியன் பொதுமக்களுக்கு உணவு தானியங்கள் தடையின்றி வழங்கப்பட்டதாகவும்,  8 கோடி குடும்பத்திற்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாகவும், தமிழகத்தில் ரூ.1.01 லட்சம் கோடியில் புதிய தொழில் வழித்தடம் அமைக்கப்படும் என்றும் கூறினார்.

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம் உள்பட மாநிலங்களுக்கு இடையே தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும். மதுரையில் – கொல்லம் இடையே நவீன வசதிகளுடன் கூடிய நெடுஞ்சாலை அமைக்கபடும்.

நாடு முழுவதும் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  11,500 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும். ரூ.1.03 லட்சம் கோடியில் தமிழகத்தில் 35,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
தனியார் வாகனம் 20 ஆண்டுகளும், வாடகைக்கு இயக்கப்படும் கமர்ஷியல் வாகனங்கள 15 ஆண்டுகள் வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் மாசுபாட்டை தவிர்க்க நகர்புற தூய்மை இந்தியா திட்டம் 2.0 அறிமுகம்.
நகர்புற பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படும்

ஊட்டச்சத்தை மேம்படுத்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும்.

நீர்வளத்துறையில் ஜன் ஜீவன் மிஷன் அறிமுகம்.

உள்கட்டமைப்பு வசதிகளுக்கு இந்த ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

மூலதன செலவினங்களுக்கு ரூ.5.45 லட்சம் கோடி ஒதுக்கீடு.

சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்த பழைய வாகனங்களை திரும்பப் பெறும் கொள்கை அறிமுகம். பழைய வாகனங்களின் பயன்பாட்டை தடுத்து, காற்று மாசுப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.1.41 லட்சம் கோடியில் நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம்  அறிவிக்கப்படுவதாகவும், அதன்படி  அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்கும் என்றார்.

இந்தியாவின் வேளாண் பொருட்களை சுமார் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய புதிய திட்டங்கள்