டெல்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை வாசித்து வரும் நிதி அமைச்சர், திருக்குறளை மேற்கோள் காட்டி, அதன்படி மோடி அரசு செயல்படுவதாக தெரிவித்தார்.!இந்திய வரலாற்றில் முதல்முறையாக டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அவரது அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,நாடாளுமன்றத்தில் 2020-21 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வரும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், திருக்குறளை மேற்கோள்காட்டி பேசினார்.
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு
என்ற திருவள்ளுவரின் திருக்குறளைக் கூறி, அதற்கான விளக்கத்தை ஆங்கிலத்தில் கூறினார்.
அதன்படி, ‘பொருள் வரும் வழிகளை மென்மேலும் உண்டாக்கலும், வந்தவற்றைத் தொகுத்தலும், காப்பாற்றுதலும், காப்பாற்றியதைத் தக்கபடி வகுத்துச் செலவிடுதலும் ஆகியவற்றில் வல்லவனே அரசன்’ என்று குறிப்பட்டு, திருக்றளில் தெரிவிக்கப்பட்டுள்ளது பாடியே மோடி தலைமையிலான மத்திய அரசும் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.