டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் என நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் அறிவித்து உள்ளார். மேலும், பழங்குடியினர் பகுதிகளில் 750 பள்ளிகள், சிறுகுறு தொழில் மூலதனம் ரூ.2கோடியாக உயர்வு உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிதி அமைச்சர், உயர்கல்வி ஆணையம் விரைவில் அமைக்கப்படும் என்றும், லடாக்கில் உள்ள லே பகுதியில் மத்திய பல்கலைக் கழகம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தேசிய மொழி மொழிபெயர்ப்பு முயற்சியை அரசு முன்மொழிகிறது. அதற்காக ஐந்து ஆண்டுகளில் ரூ .50,000 கோடி ஒதுக்கப்பட உள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு இனி டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும். அதற்காக ரூ .3,726 கோடி ஒதுக்குகிறது
செவிலியர்கள் நலனுக்காக புதிய ஆணையம் அமைக்கப்படும்
தேயிலை தொழிலாளர்கள் நலனுக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
5 ஆண்டுகளில் ரூ.4,000 கோடி செலவில் கடற்பணிகள் மேற்கொள்ளப்படும், 5 முக்கிய இடங்களில் மீன்பிடி மையங்கள் அமைக்கப்படும்
சென்னை உள்ளிட்ட ஐந்து முக்கிய துறைமுகங்களை மேம்படுத்த மத்திய அரசு முடிவு
கேரள மாநிலத்தில் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ரூ.65,000 கோடி ஒதுக்கீடு
அசாம் மாநிலத்திற்கு ரூ.3,400 கோடி ஒதுக்கீடு – நிர்மலா சீதாராமன்
உலகிலேயே கார்ப்பரேட் வரி இந்தியாவில் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது
சிறுகுறு நிறுவனங்களின் மூலதனம் ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.2 கோடியாக உயர்த்தப்படுகிறது.
டிஜிட்டல் பரிமாற்ற திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1,500 கோடி ஒதுக்கீடு
அரசின் முக்கிய திட்டங்களை மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்ய புதிய திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
சமூக பாதுகாப்பு திட்டங்கள் பிளாட்பார்மில் வசிக்கும் மக்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்றும் புலம்பெயர்ந்த மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் பற்றிய தகவல் சேகரிக்க தனி இணைய பக்கம் ஆரம்பிக்கப்படும்.
பழங்குடியினர் பகுதிகளில் 750 பள்ளிகள் அமைக்கப்படும் என்றும் பழங்குடியின மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகைக்காக ரூ.35.219 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும் நிர்மலா அறிவித்துள்ளார்.