டில்லி,

பாராளுமன்றத்தில் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட், நிதி அமைச்சர் அருண்ஜெட்லியால் வாசிக்கப்பட்டு வருகிறது.

இதில், நாட்டில் உள்ள 56 உபயோகத்தில் இல்லாத விமான நிலையங்கள் உதான் திட்டம் மூலம் இணைக்கப்படும் என்று கூறினார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று  பாராளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இன்றைய கூட்டுகூட்டத்தில்    மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி பொது நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்..

நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியான  ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அதுகுறித்த எந்தவித முழுமையான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் விவசாயம் மற்றும் கிராமப்புற கட்டமைப்பு உயரும் என்றும் அறிவித்துள்ள மோடி அரசு,  நாடு முழுவதும் உபயோகத்தில் இல்லாத 56 விமான நிலையங்களை புணரமைத்து, உதான் திட்டம் மூலம் சிறிய ரக விமான போக்குவரத்துக்கு ஆவன செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.