சோப்பு முதல் சூப் மிக்ஸ் வரை அனைத்துப் பொருட்களின் விலையையும் உயர்த்த யூனிலீவர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனையாகும் முன்னணி பொருட்களை தயாரித்து வரும் யூனிலீவர் நிறுவனம், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் எதிர்பார்த்த விற்பனையை எட்டியதாக அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக தென் கிழக்கு ஆசிய நாடுகளில் விற்பனை குறைந்தபோதும், அமெரிக்கா, இந்தியா, சீனா, துருக்கி ஆகிய நாடுகளில் தேவை அதிகரித்ததன் காரணமாகவே இந்த இலக்கை எட்ட முடிந்ததாக கூறியிருக்கிறது அந்நிறுவனம்.
இருந்தபோதும், விலைவாசி உயர்வு காரணமாக உற்பத்தி மற்றும் இதர செலவினங்கள் உயர்ந்துள்ளதால், வரும் ஆண்டில் தங்கள் விற்பனையை தக்கவைத்துக்கொள்ள பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அந்த நிறுவனத்தின் நிதித்துறை தலைவர் க்ரேமே பிட்கெதலி தெரிவித்துள்ளார்.
மெக்ஸிகோ, ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் யூனிலீவர் பொருட்களின் விலை ஏற்கனவே உயர்த்தப்பட்ட நிலையில், இந்த புதிய விலை உயர்வு அறிவிப்பு எந்த பிராந்தியத்தில் இருக்கும் என்பது குறித்து விளக்கமளிக்கப்படவில்லை.