காபூல்
ஆப்கானிஸ்தான் நாட்டில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் வறுமை, பாதுகாப்பு அச்சுறுத்தல்,. பெண்களுக்கு எதிரான வன்முறை, உள்நாட்டுப் போர் ஆகியவை அதிகரித்துள்ளன. இதனால் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் குழந்தை திருமணம் மற்றும் அச்சுறுத்தலினால் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதும் அதிகம் ஆகி உள்ளது.
சர்வதேச குழந்தைகள் நிறுவனமான யுனிசெஃப், “ஆப்கானிஸ்தனில் 7 முதல் 17 வயதான குழந்தைகள் பள்ளிக்கு செல்வது மிகவும் குறைந்துள்ளது. மொத்த மாணவர்கள் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. பள்ளிப்படிப்பை நிறுத்தியவர்களில் 60% பெண் குழந்தைகள் ஆவார்கள்.
குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறை காரணமாக பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை. இவ்வாறு பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் குழந்தைகள் தீய செயல்களில் ஈடுபட வாய்ப்பு அதிகம் உள்ளது “ என எச்சரிக்கை விடுத்துள்ளது.