சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன் சுயசரிதை நூலை ராகுல்காந்தி இன்று வெளியிடுகிறார். அந்தநிகழ்ச்சியில் கலந்துகொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் வருகை தந்துள்ளனர். அவர்களுக்கு திமுக எம்எல்ஏவும், முதல்வரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். முன்னதாக திமுக எம்.பி. கனிமொழி வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சி நடைபெறும் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மாலை 3.35 மணி அளவில் ராகுல் காந்தி வந்தடைந்தார். அவரைத்தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி ஜியன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா, பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்பட ஏராளமானோர் வருகை தந்துள்ளனர்.
மேலும், திமுக முன்னணியினர் வரவேற்றனர். முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், முதல்வரின் குடும்பத்தினர், நடிகர்கள் பார்த்திபன், பிரபு, நாசர் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
முன்னதாக விழாவுக்கு வந்தவர்கள் திமுக எம்.பி. கனிமொழி வரவேற்று பேசினார். அவரைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் விழாவில் மேடையில் கலந்து கொண்டவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
[youtube-feed feed=1]







