நெட்டிசன்:
மூத்த செய்தியாளர் ஆர். நூருல்லா
மறக்க முடியாத நாள். செப்டம்பர் 22.
கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு 22 9 1990 அன்று தேசிய ஒருமைப்பாட்டு குழு கூட்டம் முதன் முதலில் சென்னையில் நடைபெற்றது .
இதில் கருணாநிதி, ஜெயலலிதா, ராஜீவ் காந்தி, விபிசிங், ஜோதிபாசு, என்டி ராமாராவ், ஈகே நாயனார் போன்ற தலைவர்கள் பங்கேற்றனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பத்தாவது மாடியில் கூட்டம் துவங்குவதற்கு சற்று முன், அதாவது காலை 9 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது.
காலை 6:00 மணி அளவில் தலைமைச் செயலகத்தின் பத்து மாடி கட்டிடத்திற்கு அருகில் மிக மிக சக்திவாய்ந்த உயரழுத்த வெடிபொருட்களால் தயார் செய்து குறித்த நேரத்தில் வெடிக்க தீவிரவாதிகள் வைத்திருந்த வெடிகுண்டுகளை காவல் துறையின் வெடிகுண்டுச் செயலிழப்பு நிபுணர் கண்ணன் தக்க நேரத்தில் கண்டறிந்து, அதனைச் செயலிழக்கச் செய்தார். உயிர் இழப்புகளையும் தடுத்துக் காப்பாற்றினார்.
அதனால் அவர் அனைத்து உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெற்ற நாள் 22 9 1990.
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலாக செயல்பட்டுத் தமிழக காவல் துறைக்குப் பெருமை சேர்த்தார்.
மறக்க முடியாத நாள்.