“அமெரிக்க அதிபர் பதவிக்கு டொனால்ட் ட்ரம்ப் தகுதியற்றவர்” என்று அமெரிக்காவின் இரு முன்னணி பத்திரிக்கைகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இது ட்ரம்ப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

trump

‘தி வாஷிங்டன் போஸ்ட்’, ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இவ்விரண்டும் அமெரிக்காவில் வெளிவரும் முன்னணி பத்திரிக்கைகளாகும். இந்த இரு பத்திரிக்கைகளும் ஒரே குரலில் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் பதவிக்கு சிறிதும் தகுதியற்றவர். அவரது முதிர்ச்சியற்ற அவதூறு பேச்சுக்களும், வெறுப்பூட்டும் நடவடிக்கைகளும் அமெரிக்க அதிபர் எனும் உயர்ந்த பதவிக்கு களங்கமாக அமையும் என்று தங்கள் தலையங்கங்களில் எழுதியுள்ளன.
நமது அதிபர்கள் நாட்டின் இளைய சமுதாயத்துக்கு முன்மாதிரியானவராக விளங்க வேண்டும். ட்ரம்ப் ஒரு முன்மாதிரி மனிதர் அல்ல. அவர் தோற்கடிக்கப் பட வேண்டும் என்று அவை கருத்து கூறியுள்ளன.
இதற்கிடையே நியூயார்க் டைம்ஸ் ஹிலாரி கிளிண்ட்டனை அடுத்த அதிபராக தகுதியுடையவர் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.