இந்தியாவில் மக்கள் தொகைப் பெருக்கம் அதிவேகமாக அதிகரிப்பதால் அடுத்த 35 ஆண்டுகளில் கடும் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை செய்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“இந்தியப் பொருளாதாரத்தால் 140 மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும். ஆனால், வரும் 2050 ஆம் ஆண்டுவாக்கில் 280 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்துக்கு இந்தியா தள்ளப்படும்.
உலக அளவில் விவசாயத் துறையில் அதிகம் பேர் ஈடுபட்டுள்ள நாடான இந்தியா, குறைந்த வருவாய் உள்ள மக்கள் அதிகம் பேரைக் கொண்டுள்ள நாடு என்கிற நிலையிலும் இருக்கிறது. ஆகவே உற்பத்தித் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்க இந்தியா முயற்சிக்க வேண்டும். அல்லது பெரும் வேலையில்லா திண்டாட்டத்தை சந்திக்க நேரிடும்” – என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.