டில்லி

பாஜக ஆட்சியில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக 59% பாஜக ஆதரவாளரக்ள் ஒரு கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஆய்வு நிறுவனமான  பா ரிசர்ச் செண்டர் என்னும் நிறுவனம் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில் தற்போது இந்தியர்களை அச்சுறுத்தும் இனங்கள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த கணக்கெடுப்பில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் மக்களுடைய மனதில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய விஷயங்கள் உள்ளிட்ட பலவற்றை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்த ஆய்வறிக்கையின் விவரம் வருமாறு :

இந்தியர்கள் பொதுவாக தற்போது தங்களுக்கு அச்சமூட்டும் இனங்களாக லஞ்சம், தீவிரவாதம், குற்றச் செயல்கள், சமமற்ற வருமானம், பள்ளிக் கல்வியில் தரமின்மை ஆகியவற்றுக்கு முக்கிய இடம் அளித்துள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அதாவது மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்ததில் இருந்து வேலையின்மை அதிகரித்துள்ளதாக 67% பேர் தெரிவித்துள்ளனர். அடுத்ததாக லஞ்சம் அதிகரித்துள்ளதாக 65% பேர் தெரிவித்துள்ளனர். ஒரே பணிகளை செய்வோருகு சமமான வருமானம் கிடைப்பதில்லை என பாதிக்கும் மேற்பட்டோர் தெரிவித்துள்ளனர்.

பாஜக ஆதரவாளர்களில் 59% பேர் கடந்த 5 ஆண்டுகளில் வேலை வாய்ப்பு இன்மை கடுமையாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதே கருத்தை காங்கிரஸ் ஆதரவாளர்கள் 21% பேர் தெரிவித்துள்ளனர். அதைப் போலவே பாஜக ஆதரவாளர்களில் 62% பேர் விலைவாசிகள் உயர்வு மிகவும் அதிகரித்துள்ளதாக கூறி உள்ளனர். இந்த கருத்தை காங்கிரஸ் ஆதரவாளர்களில் 70% பேர் தெரிவித்துள்ளனர்.

இந்த கணக்கெடுப்பின்படி லஞ்ச ஊழல்கள் அதிகரித்துள்ளதாக மூன்றில் இரு பங்கும் மேற்பட்டவரக்ள்கூறி உள்ளனர். இதில் 43% பேர் இது திருத்த முடியாத அளவுக்கு மோசாமாகி உள்ள்தாக கூறி உள்ளனர். இந்த இனத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆதரவாளர்களில் 69% பேர் இரு கட்சி அரசியல் தலைவர்களுமே லஞ்ச ஊழல் செய்வதாக குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்த கணக்கெடுப்பின் மூலம் பாஜக ஆட்சி மீது பாஜகவினரே கடும் அதிருப்தி அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. முக்கியமாக வேலை இன்மை என்பது வரும் மக்களவை தேர்தலில் முக்கிய விவகாரமாக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. அத்துடன் வேலை இன்மை மற்றும் லஞ்ச ஊழல்கள் அதிகரித்துள்ளதாக பாஜக ஆதரவாளர்களே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.