இஸ்ரேலில் கட்டுமானத் தொழிலாளர்களாக பணியமர்த்துவதற்கான அரசு ஆட்சேர்ப்பு மையத்தில் குவியும் மக்கள் இங்கு வேலையில்லாமல் பசியால் கிடந்து வாடுவதை விட போர் நடக்கும் நாட்டில் வேலையுடன் இறப்பது நல்லது என்று கூறுகின்றனர்.
ஹரியானாவில் உள்ள மையத்தில் குவிந்த நூற்றுக்கணக்கான வேலையற்ற இளைஞர்களில் சிலர் முதுகலை பட்டதாரிகள், ஹரியானாவில் வேலை உத்திரவாதம் இல்லாத நிலையில் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்ற நிலையிலும் இஸ்ரேலுக்கு செல்வதை இவர்கள் விரும்புகின்றனர்.
ரூ. 10,000 கட்டணம் பெற்றுக்கொண்டு எந்தவித பணி பாதுகாப்பும் இல்லாமல் இந்திய தொழிலாளர்களை இஸ்ரேல் அனுப்பி வைக்கும் வேலையில் இந்திய அரசு முழுமூச்சாக மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தால் இங்கிருந்து பட்டினி கிடந்து சாவதை விட குண்டுமழை பொழிந்தாலும் பரவாயில்லை என்று போர் நடைபெற்று வரும் இஸ்ரேல் நாட்டுக்கு செல்வதில் ஹரியானா உள்ளிட்ட வடமாநில இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருவது மிகுவும் கவலையளிப்பதாக உள்ளது.