சென்னை:
ளநிலை மருத்துவ படிப்பிற்கான 7.5 சதவீதத்திற்கு இன்று கவுன்சிலிங் நடைபெற உள்ளது.

அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில், மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 6,067 எம்.பி.பி.எஸ். – 1,380 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. இதில், பொது பிரிவினருக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கவுன்சிலிங் நேற்று துவங்கியது.

மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு பிரிவு கவுன்சிலிங் நேரடியாக, சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று நடந்தது.

இதைத் தொடர்ந்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டில், 454 எம்.பி.பி.எஸ். – 104 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. இவற்றுக்கான நேரடி கவுன்சிலிங், ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், இன்று நடைபெற உள்ளது.

நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள, 1,310 எம்.பி.பி.எஸ். – 740 பி.டி.எஸ். இடங்களுக்கான ஆன்லைன் கவுன்சிலிங் நாளை துவங்குகிறது. மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள https://www.tnhealth.tn.gov.in,https://tnmedicalselection.net என்ற இணையதளங்களை பார்வையிடலாம்.