மிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் தினமும் வெவ்வேறு இடங்களில் சுமார் 2 மணி நேரம் வரை பல்வேறு காரணங்களை கூறி, மின்வெட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால், தமிழகத்தில்மின்வெட்டே கிடையாது, தேவைக்கு அதிகமாகவே மின் உற்பத்தி இருப்ப தாக  மக்களிடையே  தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி பொய் கூறி ஏமாற்றி வருவது அம்பலமாகி உள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க, ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு 60 சதவீதமும், பொதுத் துறை நிறுவனங்கள் 30 சதவீதமும், மாநில அரசின் மின் வாரியம் 10 சதவீதமும் நிதி வழங்குகிறது.

தற்போதைய நிலையில்,  ரூ. 1,695 கோடி மதிப்பீட்டில் மின்சாரம் தயாரிப்பதற்கு தேவையான பணிகள் நடைபெற்றுவருகின்றன.  மேலும் தமிழகத்தில், கூடங்குளம் அணுமின் நிலையம், மற்றும் அனல்மின்நிலையம் மற்றும்  காற்றாலை மின்சாரமும் அதிக அளவு கிடைத்து வருவ தால், நெய்வேலியில்  நெய்வேலியில் இருந்து தினசரி 600 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வந்த  நிலையில் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

கோடையில் மின் தேவை அதிகரிக்கும் நிலையில், மின் வாரியம் எடுத்த இந்த முடிவால் தமிழகத்தில் மின்தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கியது முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின் வெட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை சென்னை போன்ற மாநகர பகுதிகளில் மின் வெட்டு இல்லாத நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையிலும் தினசரி ஒவ்வொரு பகுதி யிலும் மின்வெட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மின் அழுத்த குறைபாடு காரணமாக, அறிவிக்கபடாத மின்வெட்டு  காரணமாக மின்சாரம் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மின்வாரியத்தில் புகார் கூறினால், அவர்கள் பொதுமக்களின் புகார் குறித்து கண்டு கொள்வதே இல்லை. அதையும் மீறி மின்வாரிய அலுவலகத்துக்கு நேரடியாக சென்று புகார் கூறினார், புதுப்புதுக்காரணங்களை கூறி சமாளித்து வருகின்றனர்.

அதுபோல, மின்வாரியத்தில் இருந்து அனுப்பப்படும் குறுந்தகவலிலும் உண்மைக்கு புறம்பான தகவல்களே அனுப்பப்பட்டு வருகிறது. சுமார் 2 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்ட நிலையில், மின்சார வாரியம் அனுப்பியுள்ள குறுந்தகவலில், 1 மணி நேரம் மட்டுமே மின்சாரம் தடை பட்டதாக தகவல்களை அனுப்பி வருகின்றனர். இது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சனிக்கிழமை அன்று வடசென்னை மூலக்கடை  பகுதியில் முற்பகல் 11 மணி முதல் 1.15 மணி வரை சுமார் இரண்டரை மணி நேரம்  மின்சாரம் தடைபட்டது. ஆனால், மின்தடை குறித்து புகார் அளிக்க முயன்றால், மின்வாரிய புகார் தொலைபேசி ரிசிவரை கீழே எடுத்து வைத்து விட்டு மின்சார வாரிய  பணியாளர்கள் ஓய்வாக அமர்ந்துவிட்டனர்.

ஏராளமானோர்  புகார் அளிக்க முயன்றும், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்வாரிய புகார் எண் பிசியாக இருந்ததால் பொறுமையிழந்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் மொத்தமாக சேர்ந்து, மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று நேரடியாக புகார் கொடுத்தனர்.

மக்கள் மொத்தமாக வருவதை கண்ட பல மின் ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்து எஸ்கேப்பாகி விட்டனர். அங்கிருந்த ஊழியரிடம் மின்தடை குறித்து காரணம் கேட்டால் ஃபீடர் ரிப்பேர் ஆகிவிட்டது என்றும், ஏராளமானோர் ஏசி பயன்படுத்துவதால் மின்கேபிள்கள் எரிந்து விடுவதாக வும் சாக்குபோக்கு கூறினர்.

மின்தடை குறித்து முன்கூட்டியே குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்பட வேண்டுமே, அது ஏன் தெரிவிக்கப்படவில்லை என்றால், அதற்கு பதில் அளிக்க தெரியவில்லை. ஆனால், நேரடியாக சென்று புகார் அளித்து சென்ற பிறகு, சுமார் 1 மணி நேரம் கழித்து, அடுத்த ஒரு மணி நேரம் மின்தடை என்று மின்விநியோகம் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்தவர்களின் மொபைலுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டது.

ஏற்கனவே 1 மணி நேரம் மின்தடை ஏற்பட்டிருந்த நிலையில், அதுகுறித்து எந்த தகவலும் தெரிவிக்காமல்  மேலும் 1 மணி நேரம் மின் தடை என குறுந்தகவல் தெரிவித்தது.

அன்றைய தினம் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை இருந்த நிலையில்,  தமிழக அரசும், மின்சார வாரியமும்  மின்வெட்டே இல்லை என்று சாதித்து வருகிறது. சென்னையில் மின்வெட்டு செயல்படுத்தப்படுவதை, திட்டமிட்டே இதுபோன்ற பொய்யான தகவல்களை தெரிவித்து ஏமாற்றி  வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போதே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு  செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், சென்னை போன்ற மாநகரங்களிலும் தினசரி ஒவ்வொரு பகுதியிலும் மின்சார பீடர் பிரச்சினை என்று கூறி தினசரி 2 மணி நேரம் வரை மின்வெட்டை தமிழகஅரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழகம் மின்மிகை மாநிலம் என்று தமிழக மின்துறை அமைச்சர் தொடர்ந்து பொய் கூறி வரும், நிலையில், தற்போது மின் இயக்கி தகராறு, ஃபீடர் தகராறு, கேபிள் எரிந்துவிட்டது போன்று பொய்யான காரணங்களை கூறி, மின்வெட்டை அமல்படுத்தி வருகிறது. ஆனால், அதை ஒத்துக்கொள்ள மறுத்து வருகிறது.

கோடை காலங்களில் அதிக மின்தேவை தேவைப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழகஅரசும், மின்சார வாரியமும் எடுக்காமல், தற்போது சாக்குபோக்கு கூறி மின்வெட்டை மறைப்பது ஏன்?

மின்மிகை மாநிலம் என்று கூறும் தமிழக அமைச்சர்,  மின்தடை போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க தகுந்த நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை, இதை செய்ய வேண்டியது யார்?

தமிழக மின்சார பிரச்சி னையில் மாநில மின்வாரியம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். மத்திய, மாநல அரசுகளும்  கூடுதல் கவனம் செலுத்தி மின்தடை ஏற்படாத வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்…

இல்லையேல் விரைவில் தமிழகம் இருளில் மூழ்கும் நிலை ஏற்படும் அவல நிலைக்கு செல்லும்… இது ஆட்சியாளர்களுக்கும்  மிகப்பெரிய கரும்புள்ளியுடன் கூடிய  முற்றுப்புள்ளியாகி விடும்….