ஆமதாபாத்:
குஜராத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு அளித்து. குஜராத் அரசு  பிறப்பித்த  அவசர சட்டத்தை குஜராத் ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.
gujarat-court
குஜராத்தில் பட்டேல் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தினர். ஹர்திக் பட்டேல் என்பவர்  தலைமையில் பட்டேல் சமுகத்தினரின் போராட்டம் தீவிரம் அடைந்து குஜராத் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

பட்டேல் சமுகத்தினரின் போராட்டம்
பட்டேல் சமுகத்தினரின் போராட்டம்

இதன் காரணமாக, குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்திபென் அவசர சட்டம் பிறப்பபித்து, போராட்டத்தை கைவிட செய்தார். அந்த சட்டத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பொதுப்பிரிவினருக்கு  வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும்  என அறிவித்திருந்தது அரசு.
இந்த அவசர சட்டத்தை எதிர்த்து சமூக ஆர்வலர் ஜெயந்த்பாய் மானானி மற்றும் பலர் குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஆர்.சுபாஷ் ரெட்டி, நீதிபதி வி.எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது.
முன்னாள் முதல்வர் ஆனந்திபென்
ஆனந்திபென்

அப்போது, குஜராத் அரசு பிறப்பித்த அவசர சட்டம், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறி, அதனை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
ஐகோர்ட்டின் இந்த உத்தரவால்  குஜராத் மாநில அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.  ‘ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் விரைவில் மேல்முறையீடு செய்வோம்’ என்று மாநில சுகாதாரத்துறை மந்திரி நிதின் பட்டேல் தெரிவித்தார்.
ஆனால் இந்த தீர்ப்பை ஹர்திக் பட்டேல் வரவேற்றுள்ளார். நாங்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கத்தான் போராடி வருகிறோம், எங்கள் போராட்டம் தொடரும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.