புதுடெல்லி:
ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், அரசுமுறைப்பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
இந்தியா வரும் ஐநா பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். இந்த பேச்சு வார்த்தையின் போது பேச்சுவார்த்தையில் சில முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும்.